காப்பி செடிகளில் காணப்படும் பச்சை நிற செதில் பூச்சியை கட்டுப்படுத்த இந்த பொறிவண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டது. பின்பு இந்த பொறிவண்டு இள்சிவப்பு மாவுப்பூச்சியை நன்றாகத் தின்று அழிக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் இந்த பொறிவண்டு ஆரஹ்சு செடிகளில் காணப்படும் இரட்டைவால் மாவுப்பூச்சியை நன்றாக கட்டுப்படுத்துகிறது என்று உணர்ந்தார்கள். இந்த வண்டு பழங்கள் மற்றும் அலங்காரச் செடிகளில் காணப்படும் மாவுப்பூச்சியை விரும்பி உட்கொள்கிறது. எனவே இந்த வண்டு பல்வேறு வகையான மாவுப்பூச்சிகளை அழிக்க பயன்படுத்தலாம்.
வாழ்க்கை முறை
இந்த பொறிவண்டு தன் வாழ்க்கையை 30 நாட்களில் பூர்த்திசெய்கிறது. இனச்சேர்க்கைக்கு தயாராவதற்று 5 நாட்களும், இனச்சேர்க்கைக்குப் பிறகு முட்டை வைப்பதற்கு 10 நாட்களும் எடுத்துக் கொள்கிறது. இது தன் முட்டைகளை மாலையிலிருந்து அதிகாலை வரை வைக்கிறது. இதன் முட்டை இளம் மஹ்சள் நிறத்தில் இருக்கும். பொதுவாக முட்டை பொறிப்பதற்கு 5-6 நாட்கள் ஆகிறது. புதிதாக வெளிவரும் புழுக்கள் முதலில் மந்தமாக செயல்பட்டு பின்பு 3-4 நாட்கள் கழித்து துரிதமாக செயல்படுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் ஒரு நாள் கழித்து உடம்பில் மேல் பகுதியில் வெண்நிற மெழுகு படிவத்தை ஏற்படுத்தி கொள்கின்றன. நான்கு வளர்ச்சி நிலைகளை கொண்ட இந்த புழுக்கள் தன் நான்கு வளர்ச்சி நிலைகளுக்கு முறையே 3-4, 4-5, 7-8 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த புழுக்கள் 2-4 நாட்கள் அதிக நடமாட்டம் இன்றி சாப்பிடாமல் தன் முன் கூட்டுப் புழுப்பருவத்தை நடத்துகிறது. கூட்டுப்புழுப் பருவம் 5-6 நாட்களில் நிகழ்கிறது. கூட்டுப்புழுப்பருவத்திலிருந்து வெளி வரும் வண்டுகளின் மேல் வெண்நிற தூள் காணப்படும். வளர்ந்த வண்டுகளில் ஆண் பெண் விகிதாச்சாரம் 1 1. வளர்ந்த வண்டுகள் 50-60 நாட்கள் வரை உயிர் வாழ்கிறது. வண்டுகள் தன் வாழ்நாளில் 200-220 முட்டைகள் வரை இடுகிறது. வளர்ந்த வண்டுகள் மற்றும் புழுக்கள் எல்லா நிலை மாவுப்பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் உட்கொள்கின்றன. ஒரு பொறி வண்டின் புழு 900-1500 மாவுப்பூச்சி முட்டைகளை உட்கொள்கிறது அல்லது 30 வளர்நிலை மாவுப்பூச்சிகளை சாப்பிடும். நான்காவது நிலை பொறிவண்டு புழுக்கள் மாவுப்பூச்சிகளை நன்றாக அழிக்கிறது.
|
|
கிரிப்டோலைமஸ் பொறிவண்டு – முட்டைகள் |
கிரிப்டோலைமஸ் பொறிவண்டு –
புழுக்கள் |
|
|
கிரிப்டோலைமஸ் பொறிவண்டு –
கூட்டுப்புழுக்கள் |
கிரிப்டோலைமஸ் பொறிவண்டு |
மாவுப்பூச்சி வளர்த்தல்
கிரிப்டோலைமஸ் பொறி வண்டினை அதிக அளவு வளர்ப்பு செய்வதற்கு அதற்கு விருப்மான உணவான இளம்சிவப்பு மாவுப்பூச்சியை வளர்ப்பது அவசியமாகிறது.
மாவுப்பூச்சியின் வாழ்க்கைப்பருவம்
இந்த இளஹ்சிவப்புமாவுப்பூச்சி திராட்சை, செம்பருத்தி மற்றும் அலங்கார செடிகளில் அதிகமாக காணப்படும். ஒரு வளர்ந்த பெண் மாவுப்பூச்சி 350-500 முட்டைகளை இடும் தகுதியுடையது. இதன் முட்டைகள் ஆரஹ்சு நிறத்தில் இருக்கும். முட்டைப்பருவம் 5-10 நாட்கள் நடைபெறுகிறது. முதல்நிலை மாவுப்பூச்சி கால்களைக் கொண்டது. இதற்கு தவழ்வான்கள் என்று பெயர். இந்த தவழ்வான்கள் செடிகளில் தனக்கு தேவையான இடத்தை தெரிவு செய்து தன் கால்களை உதிர்த்து ஒரே இடத்தில் இருந்து கொண்டு சாற்றினை உறிஹ்சுகின்றன. இதன் வாழ்க்கைக் காலம் கோடையில் குறைந்தும், குளிர் காலத்தில் நீண்டும் காணப்படும்.
வளர்ப்பு
மாவுப்பூச்சியை முதலில் தோட்டங்களிலிருந்து கொண்டு வரவேண்டும். இதனை சிவப்பு பூசணியில் வளர்ப்பு செய்யலாம். நல்ல இளம் பூசணிக்காயை தெரிவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நன்றாக கழுவி, பின்பு காயில் காணப்படும் காயங்களை மெழுகு கொண்டு பூசிவிடவேண்டும். மேலும் இந்தக் காயினை 0.5 சத கார்பன்டசிம் என்ற பூசணநோய் கொல்லி மருந்தில் ஒரு நிமிடம் ஊற வைத்து நிழலில் உலரவைக்கவும். பின்பு இந்த காயில் வெள்ளை நூல் கொண்டு குறுக்கு நெடுக்குமாக சுற்ற வேண்டும். நூல் சுற்றில் சிவப்பு பூசணியை ஒரு 5 செமீ உயர மேடையில் வைத்து தெனை பூச்சிவளர்ப்பு கூண்டுகளில் வைக்கவேண்டும். இந்த கூண்டுகளின் கால்களுக்கு எறும்பு நடமாட்டம் இல்லாமல் இருப்பதற்கு எறும்பு கிணறு வைக்கவேண்டும். பின்பு பயிர்களில் காணப்படும் இளம் சிவப்புமாவுப்பூச்சியின் முட்டைப் பையினை எடுத்து காயின் மேல் வைக்கவும். இதிலிருந்து வரும் தவழ்வான்கள் காயின் பல்வேறு பகுதியில் இறங்கி அண்டிவிடும். இதே போன்று காயின் பரப்பு முழுவதும் மாவுப்பூச்சியை படியசெய்து பின்பு அந்தக் காயை பொறி வண்டுகள் வளர்ப்பதற்கும், அதனின் புழுக்கள் வளர்ப்பதற்கும், பொறிவண்டுகள் முட்டையிடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொறிவண்டு வளர்ப்பு
பூச்சிகள் வளர்ப்பு கூண்டுகளில் சிவப்பு பூசணியில் மாவுப்பூச்சிகளை வளரவிட்ட 15 நாட்களில் 100 பொறிவண்டுகளை 24 மணி நேரம் விட வேண்டும். பொறிவண்டுகள் மாவுப்பூச்சி இருக்கும் இடங்களில் தன் முட்டைகளை ஒவ்வொன்றாக அல்லது 4-12 முட்டைகளை தொகுப்பாக வைக்கும். பூச்சிகள் வளர்ப்பு கூண்டுகளில் பொறிவண்டுகளின் நடமாட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட 4-5 நாட்களில் புழுக்களை காணலாம். வளர்ந்த புழுக்கள் எல்லா நிலை மாவுப்பூச்சிகளையும் சாப்பிடும். புழுக்கள் வளர்ச்சி பெற்ற கூட்டுப்புழுக்களாக மாறுவதற்கு 13-22 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி நிலைபெறுவதற்கு காய்ந்த இலைகளை கூண்டுகளின் உள் அடிப்பரப்பில் வைக்கவேண்டும். இதில் கூட்டுப்புழுக்கள் அண்டி இருக்கும். கூட்டுப்புழுவிலிருந்து வண்டுகள் வெளி வருவது 5-6 நாட்களில் முடிவடையும். வண்டுகளுக்கு மாவுப்பூச்சிகளை இலக்காக செய்து 30 நாட்களில் புதிய வண்டு வெளிவரத் தொடங்கும். அதாவது வண்டுகள் முட்டைகளிலிருந்து வண்டுகளாக வளர்ச்சி பெறவதற்கு சாரசரியாக 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. புதிதாக வெளிவரும் வண்டுகளை சேகரித்து தனி பூச்சிவளர்ப்பு கூண்டுகளில் 10-15 நாட்கள் வரை வைக்கவேண்டும். இந்த கூண்டினில் வண்டுகள் இனச்சேர்க்கை செய்வது முட்டையிட ஏதுவான பருவ நிலையை அடைந்து விடும். இந்த வண்டுகளுக்கு உணவாக அகார்தூள் (1 கிராம்), சர்க்கரை (20 கிராம்), தேன் (40 மிலி) மற்றும் தண்ணீர் (100 மிலி) ஆகியவற்றை கலந்து வழங்கலாம்.
இதனை தயார் செய்ய 70 மிலி தண்ணீரில் 20 கிராம் சர்க்ரை கலந்து கொதிக்க வைத்து இதனுடன் ஒரு கிராம் அகார் சேர்க்கவும். பின்பு 30 மிலி தண்ணீரில் 40 மிலி தேனை சேர்த்த கலழவை சர்க்கரைத் தண்ணீரில் ஊற்றி கலக்க வேண்டும். இந்த திட உணவை சிறு துளியாக பிளாஸ்டிக் அட்டையில் வைத்து வண்டுகளுக்கு கொடுக்கலாம். ஒரு வளர்ப்பு கூண்டுலிருந்து 175 வண்டுகள் வரை பெறலாம். கோர்சைரா முட்டைகளை வண்டுகளுக்கு உணவாக பயன்படுத்தலாம். ஆனால் இதனுடன் மாவுப்பூச்சியின் முட்டைப்பையை வைப்பதன் மூலம் வண்டுகளை முட்டையிட தூண்டலாம். இவ்வாறு பொறி வண்டுகளை வளர்க்கலாம்.
பொறிவண்டுகளை வயலில் பயன்படுத்தல்
உழவர்கள் தங்கள் தோட்டங்களில் காணப்படும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிவண்டுகளையோ, புழுக்களையோ பரப்பி விடலாம். முக்கியமாக தோட்டங்களில் வண்டுகளை பயன்படுத்தலாம். தேவையில்லாமல் இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. ஒரு ஏக்கருக்கு 1000 வண்டுகள் என்ற எண்ணிக்கையில் விடலாம். |